egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

பாடசாலை செயலமர்வு

பாடசாலை பயிற்சி பட்டறை 'ஊடக எழுத்தறிவும் பொழுதுபோக்கும்' 27 பெப்ரவரி 2020

2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை பயிற்சி பட்டறை தொடர் பானந்துறை பாலிகா கல்லூரியில் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த பயிற்சி பட்டறை நிகழ்வில் குறித்த வலயத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 450 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.  இந்த நிகழ்வில் களனிப் பல்கழைக்கழகத்தின் பொதுசன ஊடகத்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சுனந்த மகேந்திர, சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர திரு. பிரசன்னஜித் அபேசூரிய ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர்.

இந்த பயிற்சி பட்டறையில், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி, உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திரு.டபிள்யூ.வி.டி. ரஞ்சித், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


செயலமர்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பேரவையினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

ஆண்டிற்கான முதலாவது பயிற்சி பட்டறை களுத்துறை பிரதேச செயலகத்தில் 2019 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற்றது.

இலங்கை பத்திரிகை பேரவையினால் நடாத்தப்படும் பாடசாலைகளுக்கான ஊடகப் பயிற்சி பட்டறை தொடரின் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை பட்டறை 'ஊடக எழுத்தறிவு மற்றும் ஊக்கப்படுத்தல் எகும் தொனிப்பொருளில் களுத்துறை மாவட்ட செயலகத்தில்  25 ஆம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில் கிட்டத்தட்ட 350 ற்கும் மேற்பட்ட களுத்துறை மாவட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் பொதுசன ஊடகத்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சுனந்த மகேந்திர, சிரேஷ்ர விரிவுரையாளர் திரு.தர்ஷன மாபா பத்ரகே மற்றும் விஷாரதா ஜகத் விக்ரமசிங்கே ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பேரவையின் தலைவர் மற்றும் ஆணையாளர், பிரதேச செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். பயிற்சி பட்டறையில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 

செயலமர்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பேரவையினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

பதுளை மற்றும் பண்டாரவளை மாவட்டங்களில் ஒக்ரோபர் 17 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு மற்றும் 18 ஆம் 2019 ஆண்டு இடம்பெற்ற செயலமர்வு

பாடசாலை செயலமர்வு ஒக்ரோபர் 17 ஆம் திகதி 2019

பதுளை மற்றும் பண்டாரவளை மாவட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளில் 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக பயிற்சி பட்டறைகள் நடாத்தப்பட்டன.

குறித்த செயலமர்வுகள் பதுளை மாநகரசபை கலையரங்கம் மற்றும் தர்மசோக கல்லூரி பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன. ஊடக எழுத்தறிவு மற்றும் பொழுதுபோக்கு எனும் தலைப்பில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் பல வலயக்கல்வி பிரிவுகளிலிருந்து  கிட்டதட்ட 800 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இநத செயலமர்வில் களனி பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் மற்றும் கட்புல கலையரங்க முன்னாள் பீடாதிபதி ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர். பயிற்சி பட்டறையில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடமபெற்றன.

பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் பேரவையின் தலைவர், பேரவை ஆணையாளர், வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மேலும் பேரவையின் பதில் ஆணையாளர், கணக்கதிகாரி, மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோரும் செயலமர்வில் இணைந்திருந்தனர். செயலமர்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பேரவையினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை பயிற்சி பட்டறை ' இலங்கை பத்திரிகை பேரவையின் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குவிதிகள் '7 பெப்ரவரி 2020

இலங்கை பத்திரிகை பேரவையினால் கலத்தியாவ மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இரண்டு விரிவுரைகள் இரண்டு தலைப்புக்களின் கீழ் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.


பேரவையின் சட்டம் மற்றும் அதன் ஒழுங்கு விதிகள் எனும் தலைப்பில் பேரவை ஆணையாளரால் விரிவுரைகள் முன்னெடுக்கப்பட்டன. மற்றுமொரு விரிவுரை தகவல் அறியும் உரிமையும் அதன் முக்கியத்துவமும் எனும் தலைப்பில் திரு தயா சிறி நரேந்திரவால் முன்னெடுக்கப்பட்டது.

Image