egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

இளம் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்சார் பயிற்சிப்பட்டறை

2026 ஜனவரி 30ஆம் தேதி, இலங்கை பத்திரிகை பேரவையின் (Sri Lanka Press Council) ஏற்பாட்டில் இளம் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்சார் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சுமார் 50 பேர் வரை கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் முக்கிய உரையை பிலிப்பைன்சைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் PEN International அமைப்பின் செயற்குழு உறுப்பினரான திரு. அமாடோ அஞ்சலோ சார்ஜ் ரொட்ரிகஸ் லாகுவெஸ்டா அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது, ஊடகவியலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அடிப்படை கோட்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்பப் பிழைகளை குறைப்பதும், பொதுக் கலாசாரத்திற்கு நேர்மறைப் பங்களிப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவை பயனுள்ளதாகப் பயன்படுத்துவதும் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பயிற்சிப்பட்டறை பல கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக அமைந்த இம்முதல் பயிற்சிப்பட்டறையில், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு தலைப்புகள் குறித்த ஆழமான அறிவு வழங்கப்பட்டது. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அபாயங்களும் பொறுப்பற்ற பயன்பாடும், மனித உறவுகளை வடிவமைப்பதில் அதன் மூலோபாய முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் கட்டமைப்பு மாதிரிகள் மற்றும் மாற்றங்கள், வாழ்வியல் முறைகளில் அதன் தாக்கம், உளவியல் விளைவுகள், அரசியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு இடையிலான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இடம்பெற்றன.

நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் திரு. பிரியன் ஆர். விஜேபண்டார அவர்கள், இலங்கையின் இளம் ஊடகவியலாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதன் தாக்கங்களும் குறித்து கல்வித் தரமான அறிவை வழங்குவதே இப்பயிற்சிப்பட்டறையின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ஆசிய ஊடக மற்றும் பண்பாட்டு சங்கத்தின் (AMCA) பொதுச் செயலாளர் திரு. நிஷாந்த ஆல்விஸ் அவர்கள், நவீன சமூக–பண்பாட்டு போக்குகளை வடிவமைக்கும் மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் கட்டமைப்புச் சார்ந்த பயன்பாடுகள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும், சமூக ஊடக தளங்களை முறையாக நிர்வகிப்பதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.


இந்த பயிற்சிப்பட்டறையை ‘Kangaroo Post' பத்திரிகையின் ஆசிரியரும், ஆசிய ஊடக மற்றும் பண்பாட்டு சங்கத்தின் (AMCA) சர்வதேச செயலாளருமான திரு. பாதும் விக்ரமரத்ன அவர்கள் வழிநடத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய சவால்களை அடையாளம் காண்பதும், நடைமுறைத் தீர்வுகளை கண்டறிவது தொடர்பான கலந்துரையாடல்களை அவர் முன்னெடுத்து, பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

இந்த பயிற்சிப்பட்டறையில் இலங்கை பத்திரிகை பேரவையின், ஆசிய ஊடக மற்றும் பண்பாட்டு சங்கம் (AMCA), ஐக்கிய இராச்சியத்தின் PEN International மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகையான ‘Kangaroo Post’ ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அவர்களில், இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் திரு. பிரியன் ஆர். விஜேபண்டார, பத்திரிகை ஆணையாளர் திரு. நிரோஷன தம்பவிட்ட, AMCA தலைவர் திரு. பாதும் பஸ்குவல், AMCA பொதுச் செயலாளர் திரு. நிஷாந்த ஆல்விஸ், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநரும் ஆசிரியர் குழு உறுப்பினருமான திரு. சிசிர யாப்பா, மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கழகத்தின் செய்தி உதவி இயக்குநர் திரு. குமுது வாஜிர ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

 

 

அநுராதபுர மாவட்டத்தில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு யூன் 22 2019 ஆம் ஆண்டு

இலங்கை பத்திரிகை பேரவையால் அநுராதபுர கிறிஸ்ரன் விடுதியில் 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 22 தொடர் செயலமர்வுகளின் மற்றுமொரு பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டது.  இந்த பட்டறையில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.  

இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.  கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச களனிப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொதுசன ஊடகத்துறைத்தலைவரும் சிரேஸ்ர ஊடகவியலாளருமான திரு. காமினி சுமனசேகர ஆகியோர் இந்த நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தனர்.


இந்த செயலமர்வில் அநுராதபுர மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

இலங்கை பத்திரிகை பேரவையால் தொடர் செயலமர்வுகளின் மற்றுமொரு பயிற்சி பட்டறை  கம்பஹா சமர பங்குற் விடுதியில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது. 

 
இந்த பட்டறையில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.  கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, சிரேஷ்ட விரிவரையாளர் விஜயானந்த ரூபசிங்க களனிப் பல்கலைகழகத்தின் திரு.காமினி சுமனசேகர ஆகியோர் பங்குபற்றியிருந்ததுடன் கலந்துரையாடல் மற்றும் உரையாடல்கள் மூலம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஊடகசெயலமர்வு திருகோணமலையில் (10.08.2019)

இலங்கை பத்திரிகை பேரவையினால் முன்னெடுக்கப்படும் செயலமர்வின் தொர்ச்சியாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளடக்கி 10 ஓகஸ்ட் 2019 அன்று திருகோணமலை ஜேகேஎபி விடுதியில் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.


இந்த பயிற்சி பட்டறை நிகழ்வில் திருகோமலை மாவட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையை சேர்ந்த பெருமளவிலான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.

இந்த பயிற்சி பட்டறையை களனிப்பல்கலைக்கழக பொதுசன ஊடகத்துறையின் தலைவரும் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு.அருண லொக்குலியன, சிரேஷ்ட விரிவரையாளர் விஜயானந்த ரூபசிங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் செந்தில்வேலவர் ஆகியோர் வழிப்படுத்தியிருந்தனர். இந்த பயிற்சி பட்டறை கலந்துரையாடல் மற்றும் உரையாடல் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர், பேரவையின் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பேரவை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழியியல் துறையின் தலைவர் கலாநிதி நவீன் ராஜ் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் பயிற்சி பட்டறையில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான 'ரட வெனுவென் ஏகத சிதிமு" என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட செயலமர்வு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாத்தளை மாவட்ட ஊடக செயலமர்வு 23 மே 2019

இலங்கை பத்திரிகை பேரவையால் நடாத்தபடும் செயலமர்வின் தொடர்ச்சியாக 23 ஆம் திகதி மே மாதம் 2019 ஆம் ஆண்டு மாத்தளையிலுள்ள ஸ்பிரிங் விடுதியில் பயிற்சி பட்டறை ஒன்று இடம்பெற்றது. முரண்பாட்டு அறிக்கையிடல் மற்றும் பத்திரிகையாளர்களின் வகிபாகம் எனும் தலைப்பில் மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த செயலமர்வு இடம்பெற்றது.


கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, சிரேஷ்ட விரிவரையாளர் திரு.சமிந்த பெர்னான்டோ மற்றும் பொலிஸ் உத்தியோத்தர் திரு.எஸ்.பி. சந்தநாயக்க ஆகியோரால் வழிநடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வு கலந்துரையாடல் மற்றும் உரையாடல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் மாத்தளை மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் கருத்து தெரிக்ககையில், தமது தொழில்முறை சார்ந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இதுபோன்ற செயலமர்வுகளை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.
 
Image