No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
டிப்ளோமா இதழியல் மற்றும் தொடர்பாடல் கற்கைநெறி
பல்வேறு அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பத்திரிகை தொடர்பிலான கருத்தரங்குகளை முன்னெடுத்தாலும்;, அரசாங்க கொள்கைகளுக்கு ஏற்ப இதழியல் மற்றும் ஊடகக்கற்கை தொடர்பில் முறையான கருத்தரங்குகள், ஊடக செயலமர்வுகளை முன்னெடுப்பது பத்திரிகை பேரவையின் கடமை மற்றும் இது நாட்டில் ஒரு சிறந்த ஊடக கலாச்சாரத்தை ஏற்படுத்தும்; என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மூன்றாவது குழுவுக்கான கற்கைநெறி நடாத்தப்படவுள்ளது, இந்தநிலையில் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடத்தில் சித்திகளும்; மற்றும் க.பொ.த சாதாரண தரததிலும் சித்தியடைந்திருத்தல் அவசியமானது, மற்றும் மூன்று வருடகால அனுபவம் ஊடகவியலாளர்களுக்கு போதுமானது.
விசாரணை
திருமதி.தில்ஹானி விஜேயரத்ன
கற்கைநெறி இயக்குனர்
பேராசியரியர் சுனந்த மகேந்திர
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
பேரவை ஆணையாளர்
இலங்கை பத்திரிகை பேரவை
இல 155/15,
காசல் வீதி,
கொழும்பு -08
இதழியல் சான்றிதழ் கற்கைநெறி
பல்வேறு அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பத்திரிகை தொடர்பிலான கருத்தரங்குகளை முன்னெடுத்தாலும்,; இதழியல் மற்றும் ஊடகக்கற்கை தொடர்பில் முறையான கருத்தரங்குகள், ஊடக செயலமர்வுகளை முன்னெடுப்பது பத்திரிகை பேரவையின் கடமையாகும்...
இதழியல் தொடர்பில் பல்வேறு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், பேரவை பரிந்துரைக்கப்பட்ட நிறுவன உத்தரவாதத்துடன் கூடிய கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவை மேம்படுத்தும் வகையிலான இதழியலின் அடிப்படையிலான ஒரு கற்கைநெறியின் தேவையை அடையாளம் கண்டுகொண்டுள்ளது.
இந்த சான்றிதழ் பாடநெறி பத்திரிகை மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த உயர் நிலையான நோக்கங்களை கொண்டுள்ளது
குறிப்பாக இந்த ஆறு மாத பயிற்சி நெறி தொழில்முறை ஊடகவியலாளர்கள், ஊடக கற்கைகளை பாடமாக பல்கலைக்கழகங்களில் கற்கும் இளங்கலை பட்டதாரிகள், ஊடக கற்கையை பாடமாக கற்ற மாணவர்கள் மற்றும் பத்திரிகை குறித்த ஆர்வமுள்ள ஆர்வலர்கள் ஆகியோருக்காக நடாத்தப்படுகிறது.
குறித்த கற்கைநெறி ஞாயிற்றுக்கிழமைகளில் இலங்கை பத்திரிகை பேரவையில் நடாத்தப்படும். எனவே விரிவுரையாளர் குழுவில் ஊடககற்கற்கைநெறி வல்லுநர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (களனி, கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக) மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உள்ளடங்குகின்றனர். சான்றிதழ் பாடநெறி சிங்கள மொழியில் நடாத்தப்படுகின்றது.
சிங்கள மொழியில் சாதாரண தரத்தில் உயர்பெறுபேற்றை பெற்ற ஊடகப்பணியாளராக நீங்கள் இருந்தால் குறித்த கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பதற்கு போதுமானது. அத்துடன் பயிற்சி விண்ணப்பதாரர்களாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் க.பொ.த.உயர்தரத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் சாதாரண அளவில் சிங்கள மொழியில் உயர்தரத்திலான சித்தியடைந்திருத்தல் வேண்டும். அல்லது அதற்று சமமான கல்வி தகுதி தேவை.
விசாரணை கலாநிதி ரியூடர் வீரசிங்க (கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர்)
விசாரணை
நிறோசன தம்பவிட்ட
பேரவை ஆணையாளர்
கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர்
காசல் வீதி, கொழும்பு -08
தொ.பே.இல : 011 269 3274
தொ.பே.இல: 071 441 3371
தொலைநகல் : 011 269 03271