No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
ஆண்டிற்கான முதலாவது பயிற்சி பட்டறை களுத்துறை பிரதேச செயலகத்தில் 2019 ஆம் ஆண்டு 25 ஆம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
இலங்கை பத்திரிகை பேரவையினால் நடாத்தப்படும் பாடசாலைகளுக்கான ஊடகப் பயிற்சி பட்டறை தொடரின் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை பட்டறை 'ஊடக எழுத்தறிவு மற்றும் ஊக்கப்படுத்தல் எகும் தொனிப்பொருளில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் 25 ஆம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் கிட்டத்தட்ட 350 ற்கும் மேற்பட்ட களுத்துறை மாவட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் பொதுசன ஊடகத்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சுனந்த மகேந்திர, சிரேஷ்ர விரிவுரையாளர் திரு.தர்ஷன மாபா பத்ரகே மற்றும் விஷாரதா ஜகத் விக்ரமசிங்கே ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் பேரவையின் தலைவர் மற்றும் ஆணையாளர், பிரதேச செயலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். பயிற்சி பட்டறையில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
https://slpc.lk/tamil/services-tamil/workshops/school-workshops/2019-25#sigProId93a46bb4cc