No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
பாடசாலை பயிற்சி பட்டறை 'ஊடக எழுத்தறிவும் பொழுதுபோக்கும்' 27 பெப்ரவரி 2020
2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை பயிற்சி பட்டறை தொடர் பானந்துறை பாலிகா கல்லூரியில் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த பயிற்சி பட்டறை நிகழ்வில் குறித்த வலயத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 450 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வில் களனிப் பல்கழைக்கழகத்தின் பொதுசன ஊடகத்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சுனந்த மகேந்திர, சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர திரு. பிரசன்னஜித் அபேசூரிய ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர்.
இந்த பயிற்சி பட்டறையில், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி, உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திரு.டபிள்யூ.வி.டி. ரஞ்சித், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செயலமர்வின் இறுதியில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பேரவையினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
View the embedded image gallery online at:
https://slpc.lk/tamil/services-tamil/workshops/school-workshops/27-2020#sigProIdf914e7c9f5
https://slpc.lk/tamil/services-tamil/workshops/school-workshops/27-2020#sigProIdf914e7c9f5