No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு குறித்த செய்தியை பிரசுரித்தல் தொடர்பானது, இதழியல் மற்றும் ஊடகக்கற்கைகள் டிப்ளோமா கற்கைநெறியின் 8 ஆவது அணியினருக்கானதும் மற்றும் இதழியல் சான்றிதழ் கற்கை நெறியின் முதலாவது அணியினருக்குமான கற்கைநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பத்திரிகை பேரவையினால் நடாத்தப்பட்டது. குறித்த நிகழ்வானது ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பங்குபற்றுதலுடன் 22 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் 2022 அன்று ராஜகிரியவில் அமைந்துள்ள, வங்கித் தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் காட்சி மற்றும் நிகழ்த்தும் கலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி. றோஹன பி. மகாலியனாராய்ச்சி தலைமையுரையை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்விற்கு கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுனந்த மகேந்திர, பேராசிரியர் ரூடர் வீரசிங்க மற்றும் பேரவையின் தலைவரும் சிரேஷ்ர விரிவுரையாளருமான மகிந்த பத்ரண உள்ளிட்ட பலரும் வருகைதந்திருந்தனர். இந்த செய்தியை உங்கள் பத்திரிகைகளில் பிரசுரிப்பீர்களானால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இந்த வியடத்தில் உங்கள் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
https://slpc.lk/tamil/services-tamil/special-events/2022-10-11-03-56-07#sigProId8c4f7db94d