egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

பெரிப்பல மற்றும் அதிச்சனுகத்த ஆகியவற்றுக்கான சமகால கலந்துரையாடல்

இலங்கை பத்திரிகை பேரவையால் பெரிப்பல மற்றும் அதிச்சனுகத்த ஆகியவற்றுக்கான சமகால கலந்துரையாடல் நேற்றைதினம் பேரவை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விதர்ஷன கன்னங்கர, பிரியந்த கொடிப்பிலி மற்றும் கலாநிதி தர்ஷன அசோக குமாரவும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை திரு. காமினி கந்தப்பொல ஒருங்கமைத்திருந்தார்.

திரைப்படங்கள் திடையிடப்பட்ட பின்னர் விவாதம் ஆரம்பித்தது. பெரிப்பல படத்தின் இயக்குனர் திரு. கயான் பெர்னாண்டோ, மற்றும் அதிச்சனுகத்த படத்தின் இயக்குனர் திரு.தனுஷக விஜேசூரிய ஆகியோர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிகழ்வில் பேரவை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மகிந்த பத்ரன, பேரவையின் ஆணையாளர், மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேலதிக நிகழ்வை பார்வையிடுவதற்கு: https://www.youtube.com/watch?v=ska0im4Yu5Y 

வாசன தினேகி மேக நாடகம் மற்றும் நூர்த்தி பாடல்கள் பற்றிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் நாடகம் மற்றும் நூர்த்தி பாடல்கள் பற்றிய 'வாசான தினேகி மேக' எனும் நிகழ்வு நேற்றையதினம் பேரவை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை ஊடகவியலாளர் காமினி கந்தபொல ஒருங்கிணைத்ததுடன் நாடகம் மற்றும் நூர்தியில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட இசைக் கலைஞர்கள், திரு. லயன்ஸ் குணதிலக்க மற்றும் வளவாளர்களாக பழைய திரைப்பட பாடல் ரசிகர் மன்றத்தின் தலைவர் திரு.பிரியந்த கமகே ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.


பேரவையின் அண்மைய வெளியீடான மாத்ய சமீக்ஷா iv திரு.லயன்ஸ் குணதிலக்க மற்றும் திரு.பிரியந்த கமகே ஆகியோருக்க பேரவை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர்களால் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் நடிகர் உதேனி சந்திரசிறி, மூத்த இசையமைப்பாளர் ஜயந்த அரவிந்த முன்னாள் கலாசார பணிப்பாளர் லால் குணசேகர மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

முழு நிகழ்வையும் பார்வையிடுவதற்கு   https://youtu.be/XUtPWefP5z8

Image