No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
இலங்கை பத்திரிகை பேரவையின் ஒழுக்கக்கோவையின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா
இலங்கை பத்திரிகை பேரவையின் ஒழுக்கக்கோவையின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா 14.10.2021 அன்று அரசாங்க தகவல் திணைக்கள கேடபோர் கூட்டத்தில் Zoom தொழில்நுட்பம் ஊடாக ஊடகத்துறை கௌரவ அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி.விஜேவீர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ச, கௌரவ பேராசிரியர் சுனந்த மகேந்திர, தாபல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். விருந்தினர் உரையை மூத்த ஊடகவியலாளர் ஆரியநந்த தொம்பகஹவத்த மற்றும் சட்டத்தரணி கே.டபிள்யூ. ஜனரஞ்ச ஆகியோர் நிகழ்த்தினர்.இலங்கை பத்திரிகை பேரவையின் இணையத்தளம் புதிய அம்சங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டு நிறைவை ஞாபகப்படுத்தும் வகையில் கடித உறை மற்றும் முத்திரை ஆகியன வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வின்போது பேரவையின் தலைவரும், சிரேஸ்ட விரிவரையாளருமான மஹிந்த பத்ரண மற்றும் பேரவை ஆணையாளர் ஆகியோரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
https://slpc.lk/tamil/media-center-tamil/press-release-tamil/the-celebration-for-the-40th-anniversary-of-sri-lanka-press-council-code-of-ethics#sigProId4cdaa1507c